Print this page

15 எம்.பிக்கள் மின்னுயர்த்தியில் சிக்கி தவிப்பு

February 07, 2019


தான் உள்ளிட்ட 15 எம்.பிக்கள், பாராளுமன்றத்திலுள்ள மின்னுயர்த்தியொன்றில் சுமார் 15 நிமிடங்கள் சிக்கித் தவித்ததாக, தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பியான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இன்னும் சில நிமிடங்கள் இருந்திருந்தால், தாங்கள் அனைவரும் மரணித்திருப்போம் என்றும் அவர் கூறினார். இதனால், சபையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றன. அதன் பின்னர், அந்த மின்னுயர்த்தியை பழுது பார்க்கும் நடவடிக்கைகள் இரவு வரையிலும் முன்னெடுக்கப்பட்டது.

அந்த 15 பேரில், ஆளும் கட்சியின் உறுப்பினர்களான வசந்த அலுவிஹார மற்றும் ரஞ்சித் அலுவிஹார ஆகிய இருவரும் அடங்குகின்றனர் என ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் இன்னும் இரண்டொரு நாட்களுக்குள் தொழிநுட்பவியலாளரை அழைத்து கலந்துரையாடுவதாக சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார்.