Print this page

2 மாவட்டங்களில் மதுபானம் இல்லை

ஜூன் 11ஆம் திகதிக்குப் பின்னர் மதுபானசாலைகள் திறக்கப்பட்டாலும்,  மதுபானங்களை விற்பதற்கு இரண்டு மாவட்டங்களில் போதுமான அளவு, மதுபானங்கள் கையிருப்பில் இல்லை என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது. 

ஊரடங்கு சட்டத்துக்குப் பின்னர் கடந்த 20ஆம் திகதியன்று மதுபானசாலைகள் திறக்கப்பட்டது. இதன்போது, இவ்விரு மாவட்டங்களிலும் உள்ள மதுபானசாலைகளில் கையிருப்பில் இருந்த மதுபானங்கள் யாவும் விற்று தீர்க்கப்பட்டுவிட்டன.

11ஆம் திகதியன்று மதுபானசாலைகள் திறந்தாலும் விற்பதற்கு சரக்கு இல்லை என்றும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.