Print this page

மஹாசேனவிலேயே கொரோனா நோயாளர்கள் அதிகம்

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எங்கு அதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர் என்பது தொடர்பிலான தகவல் கசிந்துள்ளது. 

வெலிசர கடற்படை முகாமுக்கு இணைவாக அமைந்துள்ள மஹாசேன, கெமுனு, லங்கா மற்றும் தக்சிலா ஆகிய முகாம்களுக்கு இடையியே கொரோனா தொற்று பரவியுள்ளது. 

அதிக கொரோனா தொற்றாளர்கள் மஹாசேன முகாமிலிருந்தே உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர்.  

இதேவேளை வெலிசர கடற்படை முகாம் தொகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக உறுதிபடுத்தப்படும் விடயம்  தொடர்பில் கண்காணிப்பதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டீ சில்வாவால், கொமான்டர் ஹேவகே நியமிக்கப்பட்டுள்ளார்.