Print this page

தாதிக்கு கொரோனா இல்லை; 215 பேர் குணம்

குணமடைந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 215 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 774 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் 547 பேர் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதுவரை COVID-19 தொற்றுக்குள்ளான 09 பேர் நாட்டில் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்பட்ட இராஜகிரிய, கொலன்னாவ பகுதியை சேர்ந்த இருவருக்கும், தேசிய வைத்தியசாலையின் தாதிக்கும் தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.