Print this page

ஹிஜாஸூக்கான உயர்நீதிமன்றில் மனு

ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா சார்பில்,  உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி கௌரி தவராசா, இந்த மனுவை இன்று (06) தாக்கல் செய்தார். 

கைது செய்யப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தடுப்புக்காவலில் வைத்துள்ளமை சட்டவிரோதமானது என உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள அவரை சந்திப்பதற்கு உறவினர்களுக்கு அனுமதி வழங்குமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சட்ட மா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட 06 பேர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கோரி, அவரின் மனைவி மற்றும் சகோதரரால் இரண்டு ஆட்கொணர்வு மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.