Print this page

சஹ்ரான் விவகாரம்- காத்தான்குடியில் ஒருவர் கைது

கடந்த ஆண்டு ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் சகோதரனுக்கு மருத்துவ உதவி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் கைதுசெய்து விசாரணைக்காக கொழும்பு 4ஆம் மாடிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புப் பிரிவினர் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு வெடி விபத்தொன்றில் சஹ்ரானின் சகோதரனான மொஹமட் றில்வான் காயமடைந்து வைத்தியசாலைக்குச் செல்லாமல் மறைந்து ஒல்லிக்குளம் முகாமில் இருந்து மருத்துவ சிகிச்சை பெற்றுள்ளார்.

அப்போது, அவருக்கு மருத்துவ உதவிகள் செய்த குற்றச்சாட்டில் அரசாங்க ஸ்தாபனம் ஒன்றில் கடமையாற்றிவரும் காத்தான்குடியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.