Print this page

சோபித்த தேரர் கவலை- புத்தர் சிலைகளை எரியூட்டினார்

இலங்கையில் முதற்தடவையாக புத்தர் சிலைகள் தீயில் சுட்டு எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி - எம்பிலிப்பிட்டிய போதிராஜ தர்ம நிலையத்தில் இலங்கையின் பிரதான சங்கத் தலைவராகிய கலாநிதி ஓமல்பே சோபித்த தேரரின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

பல வீடுகளிலும், தெருக்கள் ஓரமாக உள்ள அரச மரத்தடிகளிலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்த புத்தர் சிலைகள் இவ்வாறு சேகரிக்கப்பட்டு தீயில் சுட்டு எரிக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சுமார் 30க்கும் மேற்பட்ட தேரர்கள் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத வழிபாடுகளின் பின்னர் குறித்த சிலைகள் எரிக்கப்பட்டன.

இதுபற்றி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஓமல்பே சோபித்த தேரர்,இவ்வாறு புத்தர் சிலைகளை மக்கள் இல்லாத இடங்களில், தெருக்கள் ஓரமாக மரத்தடிகளில் கைவிடப்பட்டுச் செல்வதால் பௌத்த மதத்திற்கே பேரவமானம் ஏற்படுவதாகக் கவலை வெளியிட்டார்.

,இது தொடர்பில் கொழும்பு  ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது