Print this page

14 நாட்கள் பொறுமை- மஹிந்தவுக்கு அறிவுரை

இன்னும் இரண்டு வாரங்கள் கடக்கும் வரையிலும் சாதாரண மக்களுக்கான பொதுப் போக்குவரத்து சேவையை நடத்துவதை, தவிர்க்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் மே மாதம் 11ஆம் திகதி முதல் தளர்த்தப்படவுள்ளது. 

ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்துடன், பொது போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பது தொடர்பில், அனில் ஜாசிங்கவிடம் அமைச்சர் மஹிந்த அமரவீர வினவியுள்ளார். இதன்போதே மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.