Print this page

நடிகர், பாடகரின் சகோதரர்கள் கைது

February 07, 2019


மாகந்துரே மதுஷுடன் கைதுசெய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா மற்றும் நடடிகர் ரயன் வேன் ரோயன் ஆகியோரின் சகோதரர்கள் இருவரை, விசேட அதிரடிப்படை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நடிகர் மற்றும் பாடகரின் வீடுகளை சோதனைக்கு உட்படுத்தியதன் பின்னரே இவ்விருவரையும் சந்தேகத்தின் பேரில், விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை, கொக்கெய்ன் பயன்படுத்தப்படக்கூடிய உபகரணங்கள் சில, அமல் பெரேராவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது என அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

போதைப்பொருட்களை எடுத்துச் செல்வதற்கு பயன்படுத்தப்படும் பயணப்பொதி மற்றும் போதைப்பொருளை அளவையிடும் டிஜிட்டல் ரக தராசு ஆகியன ரயன் வென் ரோயனின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Last modified on Wednesday, 11 September 2019 01:40