Print this page

கஞ்சா புகைத்த ஆசிரியை கைது

போதைப்பொருள் பயன்படுத்தி கொண்டிருந்த பெண்கள் இருவர் உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் ஹசீஸ் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கல்கிஸை ரயில் வீதியில் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருந்த வீட்டிலிருந்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். 

கைது செய்யப்பட்ட நால்வரில், ஒருவர் பாடசாலையை ஆசிரியை ஆவார்.  ஆசிரியை கைது செய்யும் போது அவர், கஞ்சா புகைத்துகொண்டிருந்துள்ளார். 

அவர்களிடமிருந்து 20 கிராம் கஞ்சா, 25 கிராம் ஹசீஸ் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன. 

அவற்றின் பெறுமதி 40 ஆயிரம் ரூபாயாகுமென மதிப்பட்டிப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள், கண்டி, கல்கிஸை, அத்திட்டிய, மாலபே ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 20 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.