Print this page

பாராளுமன்ற முக்கியஸ்தர் தனிமைப்படுத்தப்பட்டார்

பாராளுமன்றத்தில் முக்கிய பணியாளர் ஒருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

பாராளுமன்றத்தின் படைக்கல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ, தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

நியூசிலாந்துக்கு தனது மனைவியுடன் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அவர், அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

தனிப்பட்ட விஜயங்களை முடித்துகொண்டு, அவுஸ்திரேலியாவிலிருந்து அவர்கள், நேற்று முன்தினம், ஸ்ரீலங்கன் விமானத்தில் நாடு திரும்பினார்.

நாடு திரும்பியதன் பின்னர் அவர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சுற்றுலா ஹோட்டலில் தனிப்பட்ட செலவில் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.