Print this page

வெள்ளைவேன் விவகாரம்- ராஜித கைது?

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன, கைது செய்யப்படும் வாய்ப்புள்ளதாக நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை வேன் சாரதிகள் என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட இருவர், நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பிலேயே ராஜித சேனாரத்ன கைதுசெய்யப்படவுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பிணை வழங்கியமை தொடர்பிலான தீர்மானத்தை, கொழும்பு மேல் நீதிமன்ற ரத்து செய்தது.

அத்துடன், இந்த வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட வேண்டுமென அறிவித்துள்ளது.

ஆகையால், வெள்ளை வேன் சாரதிகள் என இருவரை அழைத்துவந்து, ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய குற்றச்சாட்டில் ராஜித சேனாரத்ன கைதுசெய்யப்படவுள்ளார் என நீதிமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Last modified on Wednesday, 13 May 2020 06:11