Print this page

மலையக அபிவிருத்தி அதிகாரசபை மலர்ந்தது

February 07, 2019

 

பெருந்தோட்ட பிராந்தியத்தின் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை ( மலையக அபிவிருத்தி அதிகார சபை) அங்குரார்ப்பண நிகழ்வு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது, சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர்கள் சபையினருக்கு நியமனம் வழங்கப்பட்டது.

சபையின் தலைவராக தொழிலதிபர் சந்திர ஷாப்ட்டரும் பணிப்பாளர்கள் சபையினராக அமைச்சின் முன்னாள் ஆலோசகர் எம். வாமதேவன், பேராசிரியர் எஸ். சந்திரபோஸ், பேராசிரியர் பீ. கௌத்தமன் , ரொசான் ராஜதுரை ஆகியோர் நியமனம் பெற்றனர்.

அமைச்சர் திகாம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து கலாச்சார அமைச்சர் மனோ கணேசன், விசேட பிரதேசங்கள் அபிவிருத்தி அமைச்சர் வீ. இராதாகிருஸ்ணன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் எம்.பிக்கள் உட்பட மேலும் சில முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.