Print this page

மதுபான சாலைகள் மூடப்படும்

நேற்று (13) முதல் திறக்கப்பட்ட மதுபானசாலைகள் மறு அறிவித்தலை வரையிலும் மூடப்படும் என்று எச்சரி்க்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மதுபானசாலைகளுக்கு முன்பாக அநாவசியமாக ஒன்றுக்கூடுவதை தடுக்கும் நோக்கில், இன்று (14) முதல் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாட்டில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. அங்கு சமூக இடைவெளியை மறந்து  மக்கள் செயற்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவதானத்துடன் செயற்படாவிட்டால் திறக்கப்பட்ட மதுபானசாலைகளை மீண்டும் மூட வேண்டி ஏற்படும் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். 

Last modified on Monday, 18 May 2020 19:32