Print this page

ஜனாஸாவை எரிப்பதற்கு எதிராக வழக்கு

கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக உயிரிழந்த முஸ்லிம்களின் ஜனாஸாவை எரிப்பதற்கு எதிராக, மற்றுமொரு மனு உயர் நீதிமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு சார்பில் முன்னாள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா ஆஜராகவுள்ளார்.

புறக்கோட்டை பள்ளிவாசல்கள்  சம்மேளனத்தின் செயலாளர் ஏ.எச்.எம். நஸார் மற்றும் சட்டத்தரணி ஏ.சீ.எம். பெனாஸீர் ஆகியோரால் இந்த மனு தாக்கல் செயயப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.