Print this page

பாய்ந்த யுவதி தப்பினார்- குதித்த இளைஞன் சிக்கினார்

நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்த 23 வயதான யுவதியை காப்பாற்றுவதற்காக, நீர்த்தேகத்கத்துக்குள் குதித்த 32 வயதானவை சுழியோடிகளும் பொலிஸாரும் இணைந்து தேடும் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம், தலவாக்கலை, மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலேயே இடம்பெற்றுள்ளது.

நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்த 23 வயதுடைய யுவதியை காப்பாற்றச் சென்ற, நபர் காணாமல் போயுள்ளார்.

எனினும், குறித்த யுவதியை தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காப்பாற்றியுள்ளார். இன்று (21) முற்பகல் 10 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

"தலவாக்கலை ரயில்வே கடவை பாலத்தில் இருந்தே குறித்த யுவதி நீர்த்தேக்கத்துக்குள் குதித்துள்ளார். இதனை கண்ட அவ்வழியாகச்சென்ற நபரொருவர், யுவதியை காப்பாற்றும் நோக்கில் நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்துள்ளார்.

நீரிழ் மூழ்கிய யுவதியை மேலே இழுத்துவிட்டு, அவர் நீரில் மூழ்கியுள்ளார். ஏதேச்சையாக இதனை கண்ணுற்ற பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, நீர் பாதுகாப்பு அங்கியை அணிந்துகொண்டு நீர்த்தேக்கத்தில் இறங்கி யுவதியை காப்பாற்றியுள்ளார்.

எனினும், யுவதியை காப்பாற்றுவதற்காக முதலில் குதித்த நபர் காணாமல் போயுள்ளார்.

2 பிள்ளைகளின் தந்தையான அப்தீன் ரிஷ்வான் (வயது 32) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ள நிலையில், பொலிஸாரும், கடற்படையின் சுழியோடிகளும், இராணுவத்தினரும் இணைந்து அவரை தேடும் பணியை முன்னெடுத்துள்ளனர்.

காப்பாற்றப்பட்ட யுவதி லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.