Print this page

3 முஸ்லிம் பெண்கள் மரணம்- 6 பேர் கைது

மாளிகாவத்தையில் , நிதி விநியோக செயற்பாடு ஒன்றின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 6 பேருக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மக்கள் கூட்டம் அதிகமாகியதால் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 சறூக் ஹாஜியார் என்பவர் ஏற்கனவே கடந்த காலங்களில் சமூகப்பணிகளை மேற்கொண்டிருந்தார்.

அவரே, இந்த விநியோகத்தினை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த சமூகப்பணிகளில் ஒரு அம்சமாகவே நோன்பு பெருநாளையொட்டி இந்த நிதி வழங்கலை அவர், ஏற்பாடு செய்திருந்தார் என்று அறியமுடிந்தது.

ஆனாலும் நிகழ்வு ஆரம்பிக்க முன்னரே மக்கள் நெரிசல் அதிகமானதால் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Last modified on Thursday, 21 May 2020 11:17