Print this page

மாளிகாவத்தையில் பதற்றம் “ஜும்மா மஸ்ஜித் ” மூடப்பட்டது

கொழும்பு மாளிகாவத்தை பிரதேசத்திலுள்ள ஜும்மா மஸ்ஜித் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமையை அடுத்தே, வீதிகள் மூடப்பட்டுள்ளன 

அப்பிரதேசத்துக்குள் உள்நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வாகனங்கள் வெளியேறுவதற்கும் தடைசெய்யப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

ஜும்மா மஸ்ஜித் வீதிக்கு அருகிலுள்ள வீடொன்றில் நிதி நிவாரணம் வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு ஏற்பட்ட நெரிசலில் முஸ்லிம் பெண்கள் மூவர் மரணமடைந்தனர். இன்னும் எட்டுப்பேர் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில், ஆறுபேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்நிலையிலேயே ஜும்மா மஸ்ஜித் வீதி தற்காலிகமான மூடப்பட்டுள்ளது என பொலிஸார் அறிவித்தனர்.

 

 

Last modified on Thursday, 21 May 2020 11:17