Print this page

மேலும் மேலும் கொரோனா அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 1068 ஆக  அதிகரித்துள்ளது.

இதுவரை 620 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 439 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.