Print this page

3 முஸ்லிம் பெண்களும் உயிரிழந்தது எப்படி

கொழும்பு மாளிகாவத்தை கோடீஸ்வர வர்த்தகரினால் பகிரப்பட்ட ஆயிரம் ரூபாய் பணத்தை பெற பெற முயன்ற மூன்று பெண்கள் நேற்று உயிரிழந்துள்ளனர்.

மக்கள் கூட்ட நெரிசல் காரணமாக கீழே விழுந்த பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த பெண்களின் சுவாச மண்டலம் பாதிப்படைந்தமையினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக நீதிமன்ற வைத்திய அதிகார் ராவுல் ஹக் தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனையின் பின்னர் இந்த விபரம் வெளியாகியதாக மாளிகாவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், சடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்