Print this page

சாதித்த மாணவன் குளத்தில் சாவு

புதுக்குடியிருப்பு மருதமடு குளத்தில் மூழ்கி பல்கலைக்கழக புகுமுக மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு குளத்தில் குளிக்கச் சென்ற கைவேலி புதுக்குடியிருப்பை சேர்ந்த 20 வயதுடைய பிரதீப்குமார் வளர்சிகன் என்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி 2019 வர்த்தப்பிரிவில் மாவட்த்தில் மூன்றாம் நிலை பெற்றுக்கொண்டவர். அவர், 2020 ஆண்டுக்கான பல்கலைக்கழக புகுமுக மாணவன் ஆவார்.  

இவரின் உடலம் புதுக்குடியிருப்பு பொலிசார் மரணவிசாரணை அதிகாரி, தடயவியல் பொலிசார் ஆகியோரின் முன்னிலையில் எடுக்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு மரணவிசாரணைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Last modified on Sunday, 24 May 2020 22:22