Print this page

பாடசாலைகள் எப்போது?- இன்று அறிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, மார்ச் மாதம் 12ஆம் திகதி வியாழக்கிழமை முதல் மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில், இன்று (26) முக்கிய அறிவிப்பொன்று விடப்படவுள்ளது. 

மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி  அதிகாரிகளுக்கும் சுகாதார தரப்பினருக்கும் இடையில் இன்று (26) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

 இந்த கலந்துரையாடல் கல்வி அமைச்சில் முற்பகல் 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட சுகாதார தரப்பினரும் கல்வி அமைச்சர் உள்ளிட்ட கல்வி சார் தரப்பினரும் இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.