ஸ்ரீபாத வனாந்தரத்தில் வாழ்ந்த கரும்புலி, இனந்தெரியாதோரால் விரிக்கப்பட்டிருந்த வலையில் சிக்கியுள்ளது என நல்லத்தண்ணி வனஜீவராசிகள் காரியாலயம் அறிவித்துள்ளது.
நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷ்பான வனாந்தரத்தில், வாழமலை தோட்டத்தில், மரக்கறி செய்கையில் ஈடுபட்டிருந்த சிலரினால் இந்த வலை விரிக்கப்பட்டுள்ளது. அதிலேயே கரும்புலி சிக்கிக்கொண்டுள்ளது.