Print this page

தொண்டமானின் இறுதி கிரியைக்கு ஊரடங்கு தடையாகாது

மே 31ம் திகதி நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தாலும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் இறுதிக்கிரியை நிகழ்வுகளுக்கு அது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் தெரிவிக்கையில்,

‘இறுதிக்கிரியை நிகழ்வுகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சுகாதார பாதுகாப்புடன் நடத்த வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை பாதுகாப்புத்துறை செய்கிறது.

தற்போதுள்ள நிலைமையில் பெருமளவில் மக்கள் கூட்டத்தை ஒரு இடத்தில் திரட்ட முடியாது. எனவே குடும்ப உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள், மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மக்கள் இறுதி நிகழ்வில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடக்கின்றன’. – என்றார்.