Print this page

அமெரிக்க அதிகாரி பரிசோதிக்காது இலங்கைக்குள் உள்நுழைந்தார்

 

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரி ஒருவர் PCR  பரிசோதனையை நிராகரித்து நாட்டிற்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்றில் குறித்த தூதரக அதிகாரி இன்று அதிகாலை 1.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த அதிகாரி இராஜதந்திர சிறப்புரிமையின் கீழ் பரிசோதனையை மேற்கொள்ளாது வெளியேற அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் உபதலைவர் ரஜிவ் சூரியஆராச்சி இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கைக்கு தமது இராஜதந்திர பணியாளர்கள் வருகைதரும் போது, இராஜதந்திர உறவுகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாடுகள், தரங்கள் மற்றும் வழிமுறைகள் பின்பற்றப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

 
 
Last modified on Saturday, 06 June 2020 11:16