Print this page

கோத்தாபயவின் கையெழுத்தை போட்டவர் கைது

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கையெழுத்தை மற்றும் ஆவணங்களை போலியான முறையில் பயன்படுத்திய நபரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பணி நீக்கம் செய்யப்பட்டிருந்த அவரை வேதனம், கொடுப்பனவு மற்றும் பதவியுயர்வுடன் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு குறிப்பிட்டு ஜனாதிபதியின் லெட்டர் ஹெட்டில் அவரின் கையெழுத்துடன் கூடிய கடிதமொன்று இலங்கை வங்கியின் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அது போலியானது என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குமார என்ற குறித்த நபரை வங்கியின் தலைமையகத்திற்கு அழைத்த பின்னர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடிதத்தை தயாரிக்க பயன்படுத்திய மடிக்கணினி மற்றும் ஏனைய உபகரணங்கள் பொலிஸார் கைப்பற்றப்பட்டுள்ளது.

அவரை நீதிமன்றில் முற்படுத்திய பின்னர் எதிர்வரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.