Print this page

78 நாள் ஊரடங்கில் 70,042 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,490 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 498 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் ஊரடங்கு சட்டத்தை மீறிய 70,042  பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 19,856 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 25,942 பேருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Last modified on Friday, 05 June 2020 12:38