Print this page

கொரோனா கொத்து ஏற்படாலும் தேர்தல்- மஹிந்த

நாட்டுக்குள் மீண்டும் கொரோனா கொத்து ஏற்பட்டாலும் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

சில நாள்களுக்கு பகுதி பகுதியாக தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடத்தப்பட்டதன் பின்னர் மறுநாள் காலையில் இருந்தே வாக்குகள் எண்ணப்படும். 

சின்ன சின்ன அறைகளில், வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

அதேபோல வாக்களிப்பு நிலையங்களையும் சிறிய வாக்களிப்பு நிலையங்களாக மாற்றப்படும். 

விசாலமான வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் மூன்று வரிகளாக நிறுத்தப்படும் அதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.