Print this page

வாக்காளர்களே! கவனியுங்கள்- மஹிந்த அறிவுரை

எதிர்வரும் பொதுத்தேர்தலின் போது வாக்களிப்பதற்காக வாக்களிப்பு நிலையங்களிற்கு செல்லும் வாக்காளர்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்வாக்களிப்பின் போது மக்கள் பின்பற்றவேண்டிய சுகாதார நடைமுறைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள்முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பு- தேவையேற்படின் உடலின் வெப்பம் கணிப்பிடப்படும். 

 

1. வாக்களிப்பு நிலையத்திற்கு சென்றவுடன் வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டையையும் வாக்காளர் அட்டையையும் காண்பிக்கவேண்டும்

 சோதனையிடப்படுவதை தவிர்ப்பதற்காக இது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

 

2.வாக்காளர்கள் தங்கள் முகக்கவசங்களை தளர்த்தி தேர்தல்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிற்கு தங்கள் முகத்தினை காண்பிக்கவேண்டும்,

வாக்காளர்களை அவர்கள் அடையாளம் காண்பதற்காக இதனை செய்யவேண்டும் 

 

3.முகக்கவசங்களை அகற்றுமாறு கோரப்பட்டால்

முகக்கவசங்களை எவ்வாறு அகற்றவேண்டும் என்பது குறித்து சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை வாக்காளர்கள் பின்பற்றவேண்டும் 

 

4.வாக்காளர்கள் தங்கள் பூர்த்திசெய்த வாக்குச்சீட்டை பெட்டிக்குள் போடவேண்டும் 

பொருட்களை பரிமாறுவதை தவிர்க்குமாறு சுகாதார அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்

 

5.  மையை பூசுவத்றகு வாக்காளர்களின் கரங்களை தேர்தல் அதிகாரிகள் தொடமாட்டார்கள்

வாக்காளர்கள் தங்கள் கைகளை முன்னால் நீட்டுமாறு கேட்டுக்கொள்ளப்படுவார்கள்

 

6. கைகளை ஒழுங்காக நீட்ட முடியாதவர்கள் திசுவொன்றில் கைககளை வைக்கலாம் அது மேஜையில் வைக்கப்படும்

7.வாக்காளர்கள் கறுப்பு அல்லது நீல பேனையை கொண்டுவரவேண்டும் 

மேலே குறிப்பிட்ட ஏழு விடயங்களை அவதானம் செலுத்துமாறு மஹிந்த தேசப்பிரிய சகல வேட்பாளர்களிடமும் கேட்டுக்கொண்டுள்ளார். 

Last modified on Sunday, 07 June 2020 13:55