Print this page

சஜித்தின் வேட்பாளர் மஹிந்தவுடன் இணைந்தார்

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட வேட்பாளர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பிரதமர் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவையும் அவர் விரைவில் சந்தித்து தனது ஆதரவை தெரிவிக்கவுள்ளார் என அறியமுடிகின்றது.

அம்பலங்கொடையில் தேர்தலில் களமிறங்கியிருந்த டெனட் என்பவரே இவ்வாறு, மஹிந்த அணியில் இணைந்துகொண்டார்.