Print this page

பத்திக்கை இடைநிறுத்தினார் ஜனாதிபதி

கைத்தறி மற்றும் பத்திக் ஆடை இறக்குமதியை நிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

குறித்த தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ள உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும் புதிய உற்பத்தியாளர்களை ஈர்ப்பதற்காகவும் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீஶ்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.