Print this page

ஐ.தே.க எம்பியின் சாரதிக்கு விளக்கமறியல்

February 11, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறியின் சாரதிவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 18ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி, பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரியின் மீதே தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.