Print this page

USA யிலிருந்து திரும்பியோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் சிக்கியிருந்த 217 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

சிறப்பு விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்களை விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டல்களில் தற்காலிகமாக தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.