Print this page

இலங்கையில் கொரோனா பரவும் அபாயம்- ஜனாதிபதி

கவனக்குறைவாக செயற்பட்டால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்புள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது ருவிட்டர் கணக்கில் பதிவொன்றையிட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைக்கமைய செயற்படுமாறு பொது மக்களிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.