Print this page

இலங்கையில் கொரோனா 2000 ஆகும் அபாயம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 1,991 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) மாத்திரம் 40 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவர்களில் 29 பேர் மும்பையிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என்றும் ஏனைய 11 பேரும் அமெரிக்காவிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என்றும் அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேநேரம் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 22 பேர் நேற்று குணமடைந்தனர்.

அதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 548 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதேநேரம் வைரஸ் தொற்றுக்கு உள்ளான 432 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதோடு, அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 11 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.