Print this page

புலிகளுக்கு பாலசிங்கம்-தௌஹீத்துக்கு ஹிஸ்புல்லா

சட்டத்தரணியான ஒருவர்,நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கான சத்தியபிரமாணத்தை எடுத்தவர்,அரசியல் அமைப்பிற்கு கட்டுப்படுவதாக உறுதிமொழி எடுத்தவர் தீவிரவாதத்தை ஊக்குவித்துள்ளார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டுள்ள சட்ட்த்தரணி ஹிஜாஸ் ஹில்புல்லா உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு காரணமான தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் அரசியல்ஆலோசகராக செயற்பட்டவர் என பிரதி பிரதிசொலிசிட்டர் ஜெனரல் டிலீபா பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஹில்புல்லா நடவடிக்கைகளை விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் நடவடிக்கைகளுடன் அவர் ஒப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணியான ஒருவர்,நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கான சத்தியபிரமாணத்தை எடுத்தவர்,அரசியல் அமைப்பிற்கு கட்டுப்படுவதாக உறுதிமொழி எடுத்தவர் தீவிரவாதத்தை ஊக்குவித்துள்ளார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

சிஐடி விசாரணையின்போது இந்த விபரங்கள் தெரியவந்துள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடியாக தொடர்பற்றவராகயிருக்கலாம் ஆனால் மாணவர்கள் மத்தியில் தீவிரவாதத்தை பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதும் சதி முயற்சியே என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டுள்ளார்