Print this page

கொரோனா 2ஆவது அலை- பாதிக்கப்படும் நாடுகள் இதோ...

கொரோனாவின் இரண்டாவது அலை அபாயம் உள்ள நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளது. 

இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனாவிற்கான ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருவதால், அமெரிக்கா ,ஈரான், ஜேர்மனி உள்ளிட்ட 10 நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலை அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு மற்றும் முடக்க உத்தரவுகள் அமுலில் இருந்தன.

தற்போது கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதாலும், உயிரிழப்பு இல்லாத காரணத்தினாலும் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு விதிகள் மெதுவாக தளர்த்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கடந்தகால புள்ளி விவரங்களை அடிப்படையாகக் கொண்டு கொரோனாவின் இரண்டாவது அலை அபாயமுள்ள நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இலங்கை இடம்பெறவில்லை.

அந்த 10 நாடுகளில், கொரோனா நோய்த்தொற்றால் உலகிலேயே அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, ஈரான், ஜேர்மனி, சுவிற்சா்லாந்து ஆகிய நாடுகளிலும் இரண்டாவது கொரோனா அலைக்கான அபாயம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றைவிட,  உக்ரைன், பங்களாதேஷ், பிரான்ஸ், சுவீடன், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலும் கொரோனாவின் 2 அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இவற்றில் பெரும்பாலான நாடுகளில் கொரோனா பரவலைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் அதிக தீவிரத்துடன் அமுல்படுத்தப்படுவதில்லை.

இதன் விளைவாக, ஒவ்வொரு வாரமும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரமும் அதிகரித்து வருகிறது. இது, அந்த நோயின் இரண்டாவது பரவலுக்கு வித்திடும்.

இதேவேளை, பொருளாதாரச் சரிவை மீட்பதற்காக வா்த்தக மையங்களை மீண்டும் திறக்க உலக நாடுகள் பல முனைந்து வருகின்றன. இதுவும், கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலைக்கு மூலகாரணமாக அமையும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Monday, 29 June 2020 03:45