Print this page

மொட்டு+ யானை கூட்டரசாங்கம் அமையும்- டில்வின்

பொதுத்தேர்தலின் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்த தேசிய அரசாங்கம் ஒன்று கட்டாயம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

களுத்துறை - அளுத்கம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

தலைமைத்துவ பிரச்சினையே ஐக்கிய தேசியக் கட்சியானது, ரணில் விக்ரமசிங்க அணி மற்றும் சஜித் பிரேமதாச அணி என பிரிய காரணம்.

ரணில் விக்ரமசிங்கவின் காலம் முடிந்த போதிலும் அவர் தலைமைத்துவத்தை கைவிட தயாராக இல்லை.

அத்துடன் தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ளும் போராட்டதை கைவிட சஜித் பிரேமதாசவும் தயாரில்லை எனவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.