Print this page

கருணாவை எழுதினால் பேஸ்புக் முடக்கப்படும்

இராணுவத்தினரை கொலை செய்ததாக கருணா வெளிட்ட கருத்து தொடர்பில் பேஸ்புக் பக்கங்கள் ஊடாக கருத்து வெளியிட்டால், குறித்த நபரின் பேஸ்புக் கணக்கு தடை செய்யப்படும் என அரசாங்கத்தினால் எச்சரிக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கருணாவின் கருத்து தொடர்பில் கருத்து வெளியிட்ட நெருக்கமான நபரின் பேஸ்புக் கணக்கிற்கு அவ்வாறு அரசாங்கத்தின் எச்சரிக்கை அடங்கிய தகவல் கிடைத்துதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்கள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் மத தலைவர்களுக்கு கருத்து வெளியிடும் முழுமையான சுதந்திர வழங்கப்பட்டது.

எனினும் தற்போதைய அரசாங்கம் முழுமையாக அந்த சுதந்திரத்தை தடை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் வாக்குறுதியளித்த ஊடக சுதந்திரம் இதுவா என அரசாங்கத்திடம் கேட்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்