Print this page

1 கோடி பேருக்கு கொரோனா- 5இலட்சம் பேர் மரணம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது உலகில் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 82 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 54 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 5 லட்சத்து ஆயிரத்து 309 பேர் உயிரிழந்துள்ளனர்.