Print this page

சத்தமில்லாது வடக்கில் கைது வேட்டை தொடர்கிறது

வடக்கில் எவ்விதமான சத்தமும் இல்லாது இளைஞர், யுவதிகளை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. 

கிளிநொச்சியில் கடந்த சில வாரங்களில் மட்டும் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மீளெழுச்சிக்கு முயற்சித்த குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடுகளை செய்துள்ளதாக அறியமுடிகின்றது. 

கைது செய்யப்பட்டவர்களில் 17 வயதான ஒருவரும் உள்ளடங்கியுள்ளார்.

இதேவேளை கடந்த வாரத்தில் மாத்திரம் ஐந்துபேர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் கைதுசெய்யப்பட்டவர்கள் இன்னும் நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.