Print this page

ஜிந்துப்பிட்டி நபருக்கு கொரோனா இல்லை

 கொழும்பு- ஜிந்துப்பிட்டி பகுதியில் கொ​ரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட நபருக்கு, 5 த​டவைகள் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு அமைய, அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் வைத்தியசாலையிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார் என, அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஜிந்துப்பிட்டி பகுதியிலிருந்து கந்தகாடு முகாமுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்ட 154 பேரையும் திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவத்துள்ளது.

இந்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பதாக, 2ஆம் திகதி இரவு அவர், தனிமைப்படுத்தப்பட்டார். 

Last modified on Monday, 06 July 2020 02:40