Print this page

சஜித் அணிக்கு மற்றுமொரு இழப்பு

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு மற்றுமொரு இழப்பு ஏற்பட்டுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட வேட்பாளரான, அசோக வடிகமங்காவ இன்று (5) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

புத்தளம்- குருநாகல் வீதியின் பாதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்திலே​யே வேட்பாளர்  65 வயதுடைய அசோக உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட இவர்,  புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், வடமேல் மாகாண சபையின் சிரேஷ்ட உறுப்பினராவார்