Print this page

காலி முகத்திடலில் ரஷ்ய பெண்ணிடம் சேட்டை

கொழும்பு, காலிமுகத்திடலுக்கு அருகில் தனக்கு இளைஞர்கள் சிலர் தொல்லை கொடுத்ததாக வெளிநாட்டு பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் ரஷ்ய நாட்டு பெண்ணொருவரே பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவரது பதிவில், அதில் இளைஞர்கள் சிலரால் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறி பதிவொன்று பதிவிடப்பட்டுள்ளது.

தான் தனது 3 நண்பர்களுடன் காலி முகத்திடலில் பயணித்த போது 10 பேர் கொண்ட இளைஞர் குழுவொன்று தங்களுக்கு தொல்லை கொடுத்ததாக வெளிநாட்டு பெண் தெரிவித்துள்ளார்.

அதிகளவு மதுபானம் அருந்தியிருந்த ஒரு இளைஞன் தன்னை தகாத வார்த்தையில் திட்டியதாகவும், அதற்கு தலையிட முயன்ற தனது நண்பனுக்கு தாக்குதல் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தான் அந்த சம்பவத்தை பதிவு செய்தனை அறிந்தவுடன் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் தெரிவித்த போதிலும் அந்த இடத்திற்கு வருவதற்கு 20 நிமிடங்களாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் புகைப்படத்தை தனது பேஸ்புக் கணக்கில் பதிவிட்டுள்ளதாக அவரை அடையாளம் காணுவதற்கு தான் பொது மக்களின் ஆதரவை வேண்டுவதாகவும் பாதிக்கப்பட்ட ரஷ்ய பெண் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.