Print this page

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,617ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இதுவரையில் 625 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அத்துடன், குறித்த தொற்றிலிருந்து 1981 பேர் பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.