Print this page

பஸ்களில் வியாபாரத்துக்கு தடை

தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் தண்ணீர் உள்ளிட்ட திரவங்கள் விற்பனை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில், போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர, இலங்கை போக்குவரத்து சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பஸ்களில் விற்பனையில் ஈடுபடுவோர் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் செயற்படுவதாக பொதுமக்களிடமிருந்து முறைப்பாடு கிடைத்துள்ளதாக அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதம் முதல் ரயில்களுக்குள் விற்பனை நடவடிக்கைகளுக்கு ரயில்வே திணைக்களத்தினால்  தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.