Print this page

மாணவிக்கு கொரோனா?- கிளிநொச்சி முடக்கம்

யாழ் பல்கலைகழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்விபயிலும் மாணவியொருவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து  கிளிநொச்சி அறிவியல் நகர் வளாகத்தின் அனைத்து  பகுதிகளையும் சுகாதார திணைக்களம் முடக்கியுள்ளது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் பணிபுரியும் கம்பஹாவை சேர்ந்த இராணுவச்சிப்பாயின் சகோதரி கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் மாணவியாகவுள்ளார்.

இவர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து கம்பஹாவில் உள்ள சுகாதார திணைக்களத்திலிருந்து கிளிநொச்சி பிராந்திய சுகாதார திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வ தகவல் கிடைத்துள்ளது.


அதன் பின்னர் கிளிநொச்சி வளாகம் மூடப்பட்டுள்ளது.