Print this page

மின்சார கட்டணம் தொடர்பில் அதிரடி அறிவிப்பு

பொதுமக்களுக்கு மின்சார கட்டணங்களில் நிவாரணம் வழங்க அமைச்சரவையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த பெப்ரவரி மாதத்தில் அறிவிடப்பட்ட மின் கட்டணத்தையே மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு அறிவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது,  பெப்ரவரி மாதத்தில் பாவித்த மின் அலகுகளுக்கான கட்டணங்களே ஏனைய மாதங்களுக்கும் அறவிடப்படவுள்ளது.

இதேவேளை, குறித்த கட்டணங்களை செலுத்த 2 மாதங்கள் காலஅவகாசம் வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே மின்சார கட்டணத்தை செலுத்தியவர்களில் புதிய பட்டியலில் கட்டணமாக கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.