Print this page

இலங்கையில் 2,687 பேருக்கு கொரோனா

இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றாளர்கனளின் மொத்த எண்ணிக்கை 2,687 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றைய (16) நாளில் 13 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்களில் 8 பேர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளானவர்களுடன் நெருங்கி பழகியவர்கள்.

ஏனையவர்களில் கட்டாரில் இருந்து வருகைத்தந்த மூவரும், ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகைதந்த ஒருவரும் அடங்குகின்றனர்.

இதுவரை 669 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் 2007 பேர் இதுவரை பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.