Print this page

மைத்திரியே முதல் குற்றவாளி- ரணில் தெரிவிப்பு

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்களிலிருந்து நல்லாட்சி அரசாங்கம் விலகி செல்லமுடியாது.

எனினும், அதற்கான முழுப்பொறுப்பையும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பேற்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் தலைவர் அவர். முப்படைகளின் தளபதி அவர். கட்டளையிடும் அதிகாரம் அவரிடமே இருந்தது. ஆகையால் அவர்தான் முதலாவது சந்தேகநபர் ஆவார்.